புதிய கல்வி மறுசீரமைப்பு: தரம் 6 இற்கான பாடங்கள் ஜனவரி 21 ஆரம்பம்
இலங்கை பாடசாலைக் கல்வியில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் (Education Reforms) 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய சீர்திருத்தச் செயற்பாடுகள் 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளன.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:
- தரம் 6: புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2026 ஜனவரி 21 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
- தரம் 1: தரம் 1 இற்கான மாணவர்களை இனங்காணும் செயற்பாடுகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் அதேவேளை, அவர்களுக்கான புதிய முறையிலான கல்விச் செயற்பாடுகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பமாகும்.
கற்கை நூல்கள் மற்றும் மொடியூல்கள்:இற்கான
புதிய சீர்திருத்தத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றல் வளங்கள் பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னரே வழங்கப்படவுள்ளன.
- தரம் 1 மாணவர்களுக்கு: செயற்பாட்டு நூல்கள் (Activity Books)
- தரம் 6 மாணவர்களுக்கு: கற்றல் மொடியூல்கள் (Learning Modules)
இதற்கிடையில், (தரம் 5-13) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று ஜனவரி 5 ஆம் திகதி காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நடைபெறும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
Tags
செய்திகள்
