பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் சுதந்திரமாக ஓய்வெடுக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

 

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் சுதந்திரமாக ஓய்வெடுக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்: பிரதமர்





பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் சுதந்திரமாக ஓய்வெடுப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை விடுமுறை என்பது பிள்ளைகளுக்கு ஓய்வு அளிப்பதற்காகவே வழங்கப்படுவதால், விடுமுறைக் காலத்தில் அவர்களின் மனதிற்கு வீண் சுமைகளைச் சுமத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் ஆசிரியர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாடசாலைக் கல்வியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலையை உயர்ந்த மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கும், பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதற்கும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை அரசாங்கம் பாராட்டுவதாகவும் பிரதமர் கூறினார்.

இருப்பினும், பிள்ளைகளின் கல்வி மற்றும் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு குறித்தும் பரந்த அளவில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பிள்ளை பாடசாலைக் கல்வியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே பயில்வதில்லை என்றும், 13 வருடங்கள் வரை பயில்வதினால், பரீட்சைப் பெறுபேறுகளை வைத்து மட்டுமே அவரது எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்க முடியாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அதன்படி, பிள்ளைகளின் வளர்ச்சி தொடர்பில் உணர்வுப்பூர்வமாகவும் கவனமாகவும் செயற்படுமாறு ஆசிரியர்களிடமும் பெற்றோராரிடமும் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“பிள்ளைகளுக்கு விடுமுறை தேவை. எனவே, விடுமுறைக் காலத்தில் அவர்களைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” எனப் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post