மதுபோதையிலிருந்த அதிபர் உள்ளிட்ட இரு பரீட்சை அதிகாரிகள் இடைநீக்கம்!

மதுபோதையிலிருந்த அதிபர் உள்ளிட்ட இரு பரீட்சை அதிகாரிகள் இடைநீக்கம்!



மெதிரிகிரிய பிரதேசத்திலுள்ள உயர்தரப் பரீட்சை மண்டபமொன்றில் மதுபோதையில் கடமையாற்றியதாகக் கண்டறியப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் மற்றும் உதவி ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பரீட்சைத் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாடசாலை அதிபர் என்றும், மற்றையவர் ஹிங்குராக்கொட கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்றும் வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரகோன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணைகளின் முடிவில் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post