2026 ஆம் ஆண்டிலும் மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி!

 2026 ஆம் ஆண்டிலும் மாணவர்களுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை அனுமதி!



பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை, 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், நலன்புரி நன்மைகள் சபை ஊடாக 'அஸ்வெசும' கொடுப்பனவைப் பெறத் தகுதியுடைய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா வழங்கப்பட்டது.

அத்துடன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடாக பின்வரும் தரப்பினருக்கும் இக்கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது:

  • அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத, ஆனால் 300 இக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள்.
  • பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள்.
  • சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள்.

இத்திட்டத்தை 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் எனும் ரீதியில் கௌரவப் பிரதம மந்திரி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இ

Post a Comment

Previous Post Next Post