அரச சேவைக்கு 26095 புதிய நியமனங்கள்; ஆசிரியர் சேவைக்கு மட்டும் 23,344 பேர் இணைப்பு

 அரச சேவைக்கு 26095 புதிய நியமனங்கள்; ஆசிரியர் சேவைக்கு மட்டும் 23,344 பேர் இணைப்பு



அரச சேவையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக 26,095 பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,344 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மேலும், பின்வரும் அமைச்சுக்களுக்கான வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளன:

  • சுகாதார அமைச்சு: 705 பேர்
  • நீதி அமைச்சு: 452 பேர்
  • கல்வி அமைச்சு: 442 பேர்

இவை தவிர, ஏனைய பல அமைச்சுக்களிலும் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களுக்கும் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post