தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் தற்காலிகமாக பதவி விலகல்!

 


தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன அவர்கள், தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகத் தீர்மானித்துள்ளார்.

​அண்மையில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத்துக்கான கற்றல் தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையத்தள முகவரி ஒன்று அச்சிடப்பட்டிருந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

​இது தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவ்விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் தனது பதவியிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.0

​கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post