பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பம் 2025/2026: விளையாட்டுத் துறையில் தனிச் சிறப்பு வாய்ந்த மாணவர்களுக்கான விஷேட உள்ளெடுப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) 2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சிறந்த சாதனைகளைப் புரிந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கான விஷேட பல்கலைக்கழக அனுமதி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
1. வழங்கப்பெறும் பட்டப் பாடநெறிகளும் பல்கலைக்கழகங்களும்
இவ்விஷேட அனுமதிக்கான திட்டத்தின் கீழ் விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் உடற்றொழில் கல்வி தொடர்பான பட்டப் பாடநெறிகள் பின்வரும் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன:
* விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் (Sports Science and Management): இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், களனிய பல்கலைக்கழகம்
* உடற்றொழில் கல்வி (Physical Education):இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம்
* யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
2. தகைமைகளும் தேவைப்பாடுகளும்
இவ்விஷேட உள்ளெடுப்பின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பின்வரும் விளையாட்டுத் தகைமைகளில் குறைந்தது ஒன்றையேனும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
* ஒலிம்பிக் போட்டிகள்: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் (Olympic Games) பதக்கம் வென்றிருத்தல் அல்லது பங்குபற்றியிருத்தல்.
* பன்னாட்டுப் போட்டிகள்: பொதுநலவாய (Commonwealth), ஆசிய (Asian Games) அல்லது 'சார்க்' (SAARC) விளையாட்டுப் போட்டிகளில் குறைந்தது தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றிருத்தல்.
* தேசிய அணிப் பிரதிநிதித்துவம்: பொதுநலவாய, ஆசிய, சார்க் விளையாட்டுப் போட்டிகளிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான கிரிக்கெட், காற்பந்தாட்டம், றக்பி, கூடைப்பந்து, கரப்பந்தாட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முடிவு செய்யப்பட்ட ஏனைய விளையாட்டுகளிலோ இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அணியில் அங்கத்தவராக இருந்திருத்தல்.
முக்கிய நிபந்தனை: இவ்விஷேட அனுமதியின் கீழ் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகள், தங்களது பல்கலைக்கழக பட்டப் பாடநெறியை ஆரம்பிப்பதற்கு முன்பாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் (Open University of Sri Lanka) நடாத்தப்படும் பொருத்தமான அடிப்படைக் கற்கைநெறியைக் (Basic Foundation Course) கட்டாயமாகப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
3. விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய விவரங்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி:
2026 செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அனுப்ப வேண்டிய முறை: நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட / அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை (Certified Copies) இணைத்து பதிவுத் தபாலில் (Registered Post) மட்டுமே அனுப்ப வேண்டும்.
காலதாமதம் & குறைபாடுகள்: முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்களும், சரியான முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
பிரதிச் செயலாளர் / பல்கலைக்கழக அனுமதி,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,
இல. 20, வோட் பிளேஸ்,
கொழும்பு 07.
4. விண்ணப்பப் படிவம்
