2026 செப்டம்பர் மாதப் பரீட்சை நாட்காட்டி வெளியீடு

 

​2026 செப்டம்பர் மாதப் பரீட்சை நாட்காட்டி வெளியீடு: பரீட்சைகள் திணைக்களம் !



2026 செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள அரசாங்கத் துறைப் போட்டிப் பரீட்சைகள் மற்றும் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகளுக்கான கால அட்டவணையைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

​பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அவர்களின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்நாட்காட்டியின் படி, நடைபெறவுள்ள பரீட்சைகள் மற்றும் அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:

​பரீட்சை அட்டவணை விவரங்கள்:

  1. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 05, 06
    • மையம்: கொழும்பு
  2. இலங்கைத் திட்டமிடல் சேவையின் தரம் IIIஇற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான கட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 06
    • மையம்: கொழும்பு
  3. இலங்கை நில அளவையாளர்கள் சேவையின் தரம் III இலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 12
    • மையம்: கொழும்பு
  4. இலங்கை சுங்கத் திணைக்களத்தில் IIஆம் தரத்தில் உதவி சுங்க அத்தியாட்சகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 13
    • மையம்: கொழும்பு
  5. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியின் தரம் IIஇற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 20
    • மையம்: நாடு முழுவதும்
  6. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியின் தரம் IIஇற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கான கட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 27
    • மையம்: கொழும்பு
  7. நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சேவையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்கான Iஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 27
    • மையம்: நாடு முழுவதும்
  8. பிரிவெனா ஆசிரியர்கள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் விஷேட பாடசாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான Iஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 27
    • மையம்: நாடு முழுவதும்
  9. கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் இணைந்த உத்தியோகத்தர் சேவைப் பிரிவில் கறுவா அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் IIIஇற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை - 2026
    • திகதி: செப்டம்பர் 27
    • மையம்: கொழும்பு

Post a Comment

Previous Post Next Post