2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) தொடர்பான மேலதிக வகுப்புகள் (Tuition classes) மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, பின்வரும் நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும்:
- பரிக்ஷார்த்திகளுக்கான மேலதிக வகுப்புக்கள் (Tuition) ஒழுங்கு செய்தல் மற்றும் நடாத்துதல்.
- பாடநெறிக்காலச் செயலமர்வுகள் (Workshops) மற்றும் கருத்தரங்குகளை (Seminars) நடாத்துதல்.
- மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல்.
- பரீட்சை தொடர்பான சுவரொட்டிகள், பதாதைகள் (Banners) அல்லது துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்துதல்.
இந்த உத்தரவை மீறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள்
Tags
செய்திகள்
