இலங்கை அதிபர் சேவை 2025 வருடாந்த இடமாற்றங்கள்: அமுலாக்கல் திகதி மற்றும் மேன்முறையீட்டு விபரங்கள் வெளியீடு
இலங்கை அதிபர் சேவையின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம் முக்கிய விபரங்கள் வருமாறு:
நடைமுறைப்படுத்தப்படும் திகதி இந்த வருடாந்த இடமாற்ற உத்தரவுகள் 2026.01.06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். இடமாற்றம் பெற்றுள்ள அதிகாரிகளை, அவர்களுக்குப் பதிலீடாக வேறு அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காது, குறித்த திகதியில் புதிய சேவை நிலையங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க ஏதுவாக உடனடியாக விடுவிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நடைமுறைகள் இடமாற்ற உத்தரவுகள் குறித்து திருப்தியடையாத அதிகாரிகள் அரச சேவைகள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு அமைய மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.
சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் 2026.01.19 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக atslps2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
அதேவேளையில், அதன் பிரதியொன்றை Info@psc.gov.lk என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலின் தலைப்பில் (Subject) இடமாற்றப் பட்டியலின் தொடர் இலக்கத்தைக் குறிப்பிடுதல் அவசியமாகும்.
தாமதமாகக் கிடைக்கும் மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும்.
கடமைக்குச் சமூகமளித்தல் மற்றும் எச்சரிக்கை
புதிய சேவை நிலையங்களில் கடமைக்குச் சமூகமளிக்கும் அதிகாரிகள், இடமாற்ற
