2026 பாடசாலை நேரம் மற்றும் பாடவேளைகள் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

 2026 பாடசாலை நேரம் மற்றும் பாடவேளைகள் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய சுற்றுநிருபம் வெளியீடு!



2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடசாலை நடைபெறும் நேரம், பாடவேளைகளின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் ஆகியவை தொடர்பான புதிய அறிவுறுத்தல் கோவையை (ED/17/03/01/01/01) கல்வி அமைச்சு இன்று (02.01.2026) வெளியிட்டுள்ளது.

​நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்புகளைக் கருத்திற் கொண்டு இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. பாடசாலை நேரம் நீடிப்பு இரத்து

முன்னதாக திட்டமிடப்பட்டவாறு 2026 ஆம் ஆண்டில் பாடசாலை முடிவுறும் நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலயினால் பாடசாலைக் கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் நலன் கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பாடசாலைகள் வழமை போன்று காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறும்.

2. பாடவேளைகள் மற்றும் கால ஒதுக்கீடு (தரம் 6-13)

புதிய அறிவுறுத்தலின்படி, தரம் 6 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு ஒரு நாளில் 7 பாடவேளைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பாடவேளைக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

  • காலை 7.30 - 7.45: காலைக் கூட்டம் / சமய அனுஷ்டானங்கள்
  • காலை 7.45 - 8.30: முதலாம் பாடவேளை
  • காலை 10.05 - 10.30: இடைவேளை
  • பிற்பகல் 1.30: பாடசாலை நிறைவு.

(முஸ்லிம் பாடசாலைகளுக்கான வெள்ளிக்கிழமை நேர அட்டவணையில் மாற்றங்கள் உண்டு).

3. தரம் 5 இற்கான கால அட்டவணை

தரம் 5 மாணவர்களுக்கான பாடசாலை நேரமும் காலை 7.30 - பிற்பகல் 1.30 வரை திருத்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு மொத்தம் 30 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தாய்மொழி மற்றும் கணிதத்திற்கு தலா 5 மணித்தியாலங்களும், சுற்றாடல் சார் செயற்பாடுகளுக்கு 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

4. ஆசிரியர்களின் பணிச்சுமை (Workload)

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கற்பித்தல் பாடவேளைகள் தொடர்பாகவும் புதிய வரையறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • ஆசிரியர்கள்: வாரத்திற்கு குறைந்தது 28 பாடவேளைகள் கற்பித்தலில் ஈடுபட வேண்டும் (மொத்த பாடவேளைகள் 35).
  • உதவி அதிபர்கள்: வாரத்திற்கு குறைந்தது 10 பாடவேளைகள் கற்பித்த வேண்டும்.
  • பிரதி அதிபர்கள்: வாரத்திற்கு குறைந்தது 08 பாடவேளைகள் கற்பித்த வேண்டும்.
  • மேற்பார்வை ஆசிரியர்கள்: வாரத்திற்கு குறைந்தது 14 பாடவேளைகள் கற்பித்த வேண்டும்.

5. பாடசாலை ஆரம்பம்

தரம் 1 மற்றும் தரம் 6 தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்கு 2026.01.05 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்.

  • தரம் 1: மாணவர்களை இனங்காணும் செயற்பாடுகள் ஜனவரி 05 இல் ஆரம்பமாகி, முறையான கற்றல் ஜனவரி 29 இல் தொடங்கும்.
  • தரம் 6: ஜனவரி 21 ஆம் திகதி முதல் வகுப்புகள் ஆரம்பமாகு

Post a Comment

Previous Post Next Post