தரம் 6 புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சு முன் போராட்டம்

 தரம் 6 புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சு முன் போராட்டம்



தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இன்று (16) கல்வி அமைச்சுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

2026 ஆம் கல்வியாண்டில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போராட்டத்தில் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சர்ச்சைக்குரியதாக கருதப்படும் ஆங்கிலப் பாட கற்றல் மொடியுலைத் தவிர்த்து, ஏனைய பாடங்களுக்கான புதிய கற்றல் தொகுதிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post