தரம் 6 ஆங்கில மொடியுல் சர்ச்சை:பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில்; மேலும் இருவர் பணி இடைநிறுத்தம்

 தரம் 6 ஆங்கில மொடியுல் சர்ச்சை:பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில்; மேலும் இருவர் பணி இடைநிறுத்தம்



தரம் 6 ஆங்கில மொழித் தொகுதியில் (Module) ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பிரதிப் பணிப்பாளர் நாயகம் தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பாக தேசிய கல்வி நிறுவகத்தின் மேலும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, இது குறித்த உள்ளக விசாரணையின் முடிவுகள் வரும் வரை, தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக தயாரிக்கப்பட்ட தரம் 6 ஆங்கிலத் தொகுதியில், பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கல்வி அமைச்சு அதன் விநியோகத்தை இடைநிறுத்தியது.

தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த இந்தப் பாடநூல், முறையான முறைப்பாடு ஒன்றின் பின்னரே சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post