‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி  நியமனம்

 


தித்வா' (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, அனர்த்த மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை முறையாக ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ எனும் ஜனாதிபதி விசேட செயலணியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (31) மாலை நிறுவினார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் பட்டியல்

பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட இந்த உயர்நிலை அதிகாரமளிக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் பின்வருமாறு:

  1. ஹரிணி அமரசூரிய (பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்)

  2. எச். எம். விஜித ஹேரத் (வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்)

  3. ஏ. எச். எம். எச். அபயரத்ன (இராஜ்ய நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்)

  4. கே. டி. லால் காந்த (விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்)

  5. உபாலி பன்னிலகே (கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்)

  6. சுனில் ஹந்துனெத்தி (தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர்)

  7. பிமல் ரத்நாயக்க (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்)

  8. நலிந்த ஜயதிஸ்ஸ (சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்)

  9. அனில் ஜயந்த பெர்னாண்டோ (தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர்)

  10. பட்டபெதிகே தம்மிக்க (சுற்றாடல் அமைச்சர்)

  11. சுசில் ரணசிங்க (வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்)

  12. ஹனீப் யூசுப் (மேல் மாகாண ஆளுநர்)

  13. அருண ஜயசேகர (பாதுகாப்பு பிரதி அமைச்சர்)

  14. டாக்டர் என். எஸ். குமாநாயக்க (ஜனாதிபதியின் செயலாளர்)

  15. டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும (செயலாளர் - நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு)

  16. எச். எஸ். எஸ். துய்யகொன்த (பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்)

  17. பி. கே. பிரபாத் சந்திரகீர்த்தி (அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் செயலாளர் - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு)

  18. டாக்டர் ஹான்ஸ் விஜேசுரிய (ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்)

  19. எச். எஸ். கே. ஜே. பண்டார (அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்)

  20. ரோஹண ஹெட்டியாரச்சி

  21. மலர்விழி கங்காதரன்

  22. ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும

  23. சமந்தா டி சில்வா

  24. மந்தனா இஸ்மாயில்

  25. பராக்கிரம திஸாநாயக்க

இந்தச் செயலணியானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மீளமைத்தல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post