விசேட தேவையுடைய 5,530 மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவையுடைய 5,530 மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி





குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட 5,530 மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் மூலம், விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர் ஒருவருக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க முன்மொழியப்பட்டிருந்தது.

இதற்கமைய, இக்கொடுப்பனவை வழங்குவதற்காக தகுதிகளைப் பரிசீலிக்கும் நோக்கில், நாடு முழுவதும் பாடசாலைகளிலிருந்தும் குறைந்த வருமானம் பெறும் விசேட தேவையுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் 5,530 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

தகுதிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் குறித்த மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது

Post a Comment

Previous Post Next Post