கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட ரூ. 8 லட்சம் பெறுமதியான பாடநூல்கள் மாயம்

 

கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட ரூ. 8 லட்சம் பெறுமதியான பாடநூல்கள் மாயம்



​கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக 12 விநியோக மையங்களுக்கு அனுப்பப்பட்ட பாடநூல் தொகுதி ஒன்று, குறித்த மையங்களுக்கு ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

​கல்வி அமைச்சின் கீழ் உள்ள 01ஆம் தரத்தின் 03ஆம் தவணைக்குரிய தமிழ் மொழி மூல பாடநூல்கள் மற்றும் பயிற்சி நூல்கள் 19,892 என்பனவே இவ்வாறு மாயமாகியுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் 08 இலட்சம் ரூபாவாகும்.

​குறித்த பாடநூல் தொகுதியை கிழக்கு மாகாணத்தின் 12 விநியோக மையங்களுக்கும் முறையாக விநியோகிக்காமல் குற்றவியல் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, இசுருபாய கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

​இசுருபாய கல்வி அமைச்சில் அமைந்துள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலிருந்து வெளியிடப்பட்ட இந்தப் புத்தகங்களை விநியோகிப்பதற்காக பியகமவில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்த பாடநூல்களும் பயிற்சி நூல்களும் கிழக்கு மாகாணத்தின் 12 மையங்களுக்கும் முறையாக விநியோகிக்கப்படவில்லை என கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான அதிகாரியினால் கடந்த 07ஆம் திகதி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

​இதனைத் தொடர்ந்தே கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

​இச்சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஸ்ஸங்க சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post