தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி
ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டுப் பணிகளை குறுகிய காலத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே, இதற்கமைய சுமார் ஒரு மாத காலத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற இப் புலமைப்பரிசில் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 2,94,089 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags
செய்திகள்
