ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: மாணவர்களின் கருத்துக்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு தடை!

 

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை: மாணவர்களின் கருத்துக்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு தடை!



இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சில மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் கேலிக்கும் ஏளனத்திற்கும் உள்ளாக்கப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

​பெற்றோரின் அல்லது ஆசிரியர்களின் முன்அனுமதியின்றி மாணவர்களிடம் கருத்துக்களைப் பெறுவது, காணொளிகளைப் பதிவுசெய்வது அல்லது அவற்றை ஊடகங்களில் ஒளிபரப்புவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

​இத்தகைய விதிகளை மீறி, மாணவர்களின் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் வெளியிட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post